நடிகை அமலாபாலுக்கு அடித்த அதிர்ஷ்டம்! இந்த முன்னணி இயக்குனருடன் இணைகிறார்

அமலா பால் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ஆடை திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தில் அமலா பால் ஆடையின்றி நடித்திருந்தார். அவரின் இந்த துணிச்சலை பலரும் பாராட்டினர்.

இப்படத்தை தொடர்ந்து அமலா பால் நடித்த அதோ அந்த பறவை போல ஆக்ஷன் திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. மேலும் பாலிவுட்டில் வெப் சீரிஸ் ஒன்றிலும் நடிக்கவிருக்கிறார்.

இந்த வெப் தொடரை இயக்குனர் மகேஷ் பட் இயக்குகிறார். அமலா பாலுடன் இணைந்து அம்ரிதா பூரி, தாஹிர் ராஜ் பசின் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். 70-களில் பாலிவுட்டில் நடக்கும் காதல் கதையை மையமாக வைத்து இத்தொடர் உருவாகவுள்ளது.