ஹீரோயின் ஆனார் பிக்பாஸ் லாஸ்லியா…ஹீரோ யார் தெரியுமா?

பிக்பாஸ் மூன்றாவது சீசனில் 15 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துக்கொண்டவர் லாஸ்லியா. இவர் பிக்பாஸ் வீட்டில் நுழைந்த முதல் நாள் தொடங்கி இன்று வரை இவருக்கென பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.

பிக்பாஸ் சீசன் 3 நிறைவுபெற்று பல மாதங்கள் ஆகியும் லாஸ்லியாவிற்கு எந்தவொரு பட வாய்ப்புகளும் கிடைக்காமல் இருந்தார்.

இந்நிலையில் தற்போது நடிகர் ஆரி நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார். அந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இதில் லாஸ்லியாவுடன் இணைந்து ஸ்ருஷ்டி டாங்கேவும் நடிக்கிறார்.

இப்படம் மட்டுமின்றி கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடிக்கும் ப்ரெண்ட்ஷிப் என்ற தமிழ் படத்திலும் லாஸ்லியா நடிக்கவுள்ளார்.

நீண்ட மாதங்களாக லாஸ்லியாவை பெரிய திரையில் பார்க்க காத்திருக்கும் அவரது வெறியர்கள் இந்த செய்தியால் குஷியாகியுள்ளனர்.