வலிமை படத்தில் அஜித்தின் பெயர் இதுவா? கசிந்த தகவல்

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து தல அஜித் – வினோத் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளனர். இப்படத்தையும் போனி கபூரே தயாரிக்கிறார். “வலிமை” என பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வரும் இந்த படத்தை பற்றி எந்தவொரு அப்டேட்டும் வராததால் தல ரசிகர்கள் கலக்கத்தில் உள்ளனர். மேலும் ஏதாவது ஒரு அப்டேட் கொடுங்கள் என்று படக்குழுவினரை கேட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வலிமை படத்தில் அஜித்தின் பெயர் இதுதான் என்று ஒரு பெயர் சமூக வலைத்தளங்களில் உலாவி வருகிறது.

வலிமை படத்தில் அஜித்தின் பெயர் ஈஸ்வரமூர்த்தி ஐ.பி.எஸ் என்று கூறப்படுகிறது. இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை இந்த பெயர் தான் இன்னும் கொஞ்ச நாட்கள் சோஷியல் மீடியா டிரெண்டிங்காக இருக்கும்.