“வம்பை வளர்க்காமல் அன்பை வளர்ப்போம்” சிம்புவை மறைமுகமாக தாக்குகிறாரா வெங்கட் பிரபு

நடிகர் சிம்பு மற்றும் வெங்கட் பிரபு கூட்டணியில் கடந்த வருடம் “மாநாடு” படம் அறிவிக்கப்பட்டது. அறிவிப்பு வெளியாகி ஒரு வருடம் ஆகியும் மாநாடு படம் குறித்து எந்தவொரு அப்டேட்டும் வெளியாகவில்லை. இதனால் சிம்பு ரசிகர்கள் கவலையில் இருந்தனர்.

இந்நிலையில் மாநாடு திரைப்படம் கைவிடப்பட்டதாக சில நாட்களுக்கு முன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அதிகாரபூர்வமாக அறிந்திருந்தார். இது சிம்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி சிம்பு “மஹா மாநாடு” என்ற பெயரில் படம் ஒன்றை இயக்கவுள்ளதாகவும், இப்படத்தை சிம்புவே தயாரிக்க இருப்பதாகவும் நேற்று செய்திகள் வெளியானது.

இது ஒருபுறம் இருக்க மாநாடு படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு சுதந்திர தினத்தை முன்னிட்டு தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் “வம்பை வளர்க்காமல் அன்பை வளர்ப்போம்” வந்தே மாதரம் என குறிப்பிட்டிருந்தார்.

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் சாக்ஷி – வைரலாகும் புகைப்படம்

இதை பார்த்தவர்கள் வெங்கட் பிரபு சிம்புவை தான் மறைமுகமாக தாக்குகிறார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.