காமெடி நடிகர் யோகி பாபுவின் திருமணம் முடிந்தது…முதல் முறையாக வெளியான திருமண ஜோடியின் புகைப்படம்

தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் யோகி பாபு. விஜய், அஜித் என்று முன்னணி ஹீரோக்களுடன் நடித்தது மட்டுமின்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடனும் நடித்து விட்டார். மேலும் ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் யோகி பாபு அண்மையில் தனக்கு திருமணம் முடிவாகி விட்டது என்று தெரிவித்திருந்தார். அதன்படி யோகி பாபுவின் திருமணம் இன்று எளிமையாக நடந்துள்ளது.

மணப்பெண் பெயர் மஞ்சு பார்கவி இவருக்கும் யோகி பாபுவிற்கும் இன்று காலை குல தெய்வம் கோவிலில் திருமணம் நடைபெற்றது.

மார்ச் மாதம் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.