சந்தானம் காட்டில் மழை! A1 லாபம் மட்டும் இத்தனை கோடியா?

சந்தானம், தாரா அலிசா பெர்ரி, ராஜேந்திரன், எம்.எஸ். பாஸ்கர், பழைய ஜோக் தங்கதுரை ஆகியோர் நடிப்பில் ஜான்சன் கே இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் “A1”.

தமிழ் சினிமாவில் தற்போது ஒழுங்கான காமெடி நடிகர் இல்லாமல் தவித்து வந்த ரசிகர்களுக்கு இப்படம் ஒரளவு ஆறுதலாக இருந்தது. இதனால் ஆரம்பத்தில் இருந்தே A1 திரைப்படதிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

முதன் முறையாக நாமினேஷனுக்கு வந்த லாஸ்லியா!

இதன் காரணமாக தமிழகத்தில் மட்டும் A1 திரைப்படம் சுமார் ரூ 12 கோடி வரை வசூல் செய்துள்ளது. இப்படத்தின் மூலம் விநியோகஸ்தர்களுக்கு ரூ 3 கோடி வரை லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே சந்தானம் நடிப்பில் இந்த வருட ஆரம்பத்தில் வெளியான “தில்லுக்கு துட்டு2” திரைப்படம் வெற்றிபெற்ற நிலையில் இரண்டாவதாக வெளியான A1 திரைப்படமும் சூப்பர்ஹிட் ஆகியுள்ளது. இதனால் சந்தானத்தின் அடுத்தடுத்த திரைப்படங்களின் மீது எதிர்பார்ப்பு கூடியுள்ளது.