என்னை மன்னிச்சிருங்க அம்மா…மனம் உருகி பேசிய அபிராமி

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தொடங்கியதிலிருந்து பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. சென்ற வாரம் ரேஷ்மா வெளியேற்றப்பட்ட நிலையில் நேற்று பெண்களை குறித்த தவறாக பேசிய விவகாரத்தில் சரவணன் வெளியேற்றப்பட்டார். இது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சரவணன் தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்ட பிறகும் கூட அவரை வெளியேற்றியது நியாமா?  என ஒரு பக்கம் விவாதம் நடந்துக் கொண்டிருக்கிறது. இதற்கான முழு விவரமும் இன்றைய எபிசோடில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று வெளியான மூன்றாவது ப்ரோமோவில் உங்கள் வாழ்வில் ஏற்றத்தாழ்வுகளில் உங்களுடன் இருந்து ஊக்கமளித்த நண்பர்களை பற்றியும், மறக்க முடியாத நிகழ்வை பற்றியும் பகிர்ந்துக் கொள்ளவும் என்று பிக்பாஸ் கூற அதற்கு அபிராமி “எனக்கு என்னுடைய அம்மாவை தவிர வேறு யாரும் நெருக்கம் கிடையாது. அப்பா அம்மா இருவரும் பிரிந்துவிட்டனர். எனக்காக என் அம்மா நிறைய இழந்துள்ளார். எனக்கு நீ வேண்டாம் என என் அம்மாவை நான்கு மாதங்களாக பிரிந்து இருந்தேன். நான் அதற்காக என் அம்மாவிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என அழுதுகொண்டே கூறினார்.