கோவா நடுக்கடலில் ரொமாண்டிக்காக தனது காதலை புரபோஸ் செய்த பிரபல நடிகர்

கார்த்திகேயா, கேஷவா, அர்ஜூன் சுரவரம் உள்ளிட்ட பல தெலுங்கு படங்களில் நடித்தவர் நிகில் சித்தார்த். தற்போது கார்த்திகேயா 2 படத்தின் வேலைகளை சித்தார்த் தொடங்கியுள்ளார்.

இதற்கு நடுவில் தனது வருங்கால துணைவியை தேர்வு செய்துள்ளார் நிகில். டாக்டர் பல்லவி வர்மாவை கோவாவிற்கு அழைத்துச் சென்று நடுக்கடலில் ரொமாண்டிக்காக தனது காதலை புரபோஸ் செய்துள்ளார். பல்லவியும் அவருக்கு ஓகே சொல்லிவிட்டாராம்.

இதைத்தொடர்ந்து இரு வீட்டார் சம்மதத்துடன் வரும் ஏப்ரல் 16ம் தேதி ஹைதராபாத்தில் நிகில் – பல்லவி திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.