நடிகர் பிரசாந்துக்கு அடித்த அதிர்ஷ்டம் – வாழ்த்தும் ரசிகர்கள்

2018 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான படம் “அந்தாதூன்”. இப்படத்தில் ஆயுஷ்மான் குர்ரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஸ்ரீராம் ராகவன் இயக்கியிருந்தார். இப்படத்திற்கு சிறந்த ஹிந்தி படத்திற்கான தேசிய விருது கிடைத்தது.

இந்நிலையில் இப்படத்தின் ரீமேக் உரிமையை தியாகராஜன் வாங்கியிருப்பதாகவும்,  நடிகர் பிரசாந்த் ஹீரோவாக நடிக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பல வருடங்களாக வெற்றிக்காக காத்திருக்கும் நடிகர் பிரசாந்துக்கு இப்படம் நிச்சயம் கைகொடுக்கும் என நம்பப்படுகிறது.