இந்த தமிழ் நடிகைக்கு வாய்ப்பு கொடுங்கள்…முன்னணி இயக்குனர்களிடம் வேண்டுகோள் விடுத்த நடிகர் விவேக்

ஜோக்கர், ஆண் தேவதை போன்ற படங்களில் நடித்தவர் ரம்யா பாண்டியன். இவர் இப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஃபேமஸ் ஆனரோ இல்லையோ? சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பிரபலம். அந்த புகைப்படங்கள் இன்றைக்கும் இணையத்தில் வைரல்.

இந்நிலையில் காமெடி நடிகர் விவேக் ரம்யா பாண்டியனுக்காக முண்ணனி இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்டுள்ளார்.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள விவேக் “பண்பும்,அழகும், பதில்களில் பணிவும் கொண்ட ரம்யா பாண்டியன் தன் நடிப்பால் ஜோக்கர்,ஆண்தேவதை படங்களில் மிளிர்ந்தார். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு அதை சரியாக உச்சரிக்கவும் செய்யும் இவரை தமிழ் சினிமா வரவேற்க வேண்டும் என்பது என் பணிவான வேண்டுகோள்” என்று குறிப்பிட்டு ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், அட்லீ போன்றவர்களை டேக் செய்துள்ளார்.

இப்படியே அவ சொல்றத கேட்டுட்டு அமைதியா இருங்க பிக்பாஸ் – கொந்தளித்த முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர்

நன்றாக தமிழ் பேசத் தெரிந்த தமிழ் நடிகைக்கு வாய்ப்பு கேட்கும் விவேக்கின் இந்த முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.