பிக்பாஸ் வீட்டில் சாண்டி தான் உண்மையான வில்லன் – பிரபல நடிகை ஓபன் டாக்

Sandy in Bigg Boss Tamil 3

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தொடங்கி 43 நாட்கள் கடந்துவிட்டது. வழக்கமான டாஸ்க்குகள், சண்டை, காதல் என தினம் தினம் பரபரப்பாகிக்கொண்டே இருக்கிறது.

இதனிடையே பிக்பாஸ் வைல் கார்டு என்ட்ரி மூலம் கஸ்தூரி பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல இருக்கிறார் என்று கடந்த சில நாட்களாக கிசுக்கிசுக்கப்பட்டது. ஆனால் கஸ்தூரி அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார்.

இந்நிலையில் நடிகை கஸ்தூரி பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் சாண்டி விஜய் டிவியின் செல்லப்பிள்ளை. அதனால் சாண்டிய பாஸிட்டிவ்-ஆ மட்டுமே காட்டுறாங்க. கமல் சார் கூட சாண்டிக்கு தான் முக்கியத்துவம் தராரு. லாஸ்லியா கூட ஒரு தடவ சொன்னாங்க சாண்டி எல்லாத்தையும் சிரிச்சிக்கிட்டே சொல்றாருன்னு. சிரிக்காம சொன்ன சாண்டி தான் ரியல் வில்லன். இவ்வாறு கஸ்தூரி அப்பேட்டியில் கூறியுள்ளார்.