நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் மீனா! ரசிகர்கள் மகிழ்ச்சி

90-களில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. ரஜினி, கமல், கார்த்திக், சத்யராஜ், சரத்குமார் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த மீனா 2009 ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். அதன் பிறகு பெரிதாய் படங்களில் கமிட் ஆகாத மீனா அவ்வப்போது சில தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்துக்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் நடிகை மீனா மீண்டும் தமிழில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அருண் விஜய்யை வைத்து “பாக்சர்” என்ற படத்தை இயக்கிவரும் விவேக் அடுத்து ஒரு வெப் சீரிஸ் இயக்க திட்டமிட்டுள்ளார்.

இரண்டாவது நாளில் சென்னையில் வசூலை குவித்த நேர்கொண்ட பார்வை: எத்தனை கோடி தெரியுமா?

இந்த வெப் சீரிஸில் மீனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். தர்பார், காப்பான், இந்தியன் 2 போன்ற படங்களை தயாரித்து வரும் லைகா இந்த வெப் சீரிஸை தயாரிக்கிறது. ‌‌‌‌‌‌இந்த வெப் சீரிஸ் “ஜீ 5” ல் ஸ்ட்ரீம் ஆக இருக்கிறது.