நானும், சனம் ஷெட்டியும் இரவு கில்டன் ஓட்டலில் தங்கினோம்…முதல் முறையாக சனம் ஷெட்டியின் முன்னாள் காதலர் கொடுத்த பேட்டி

பிக்பாஸ் மூன்றாவது சீசனில் 15 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துக்கொண்டவர் தர்ஷன். இவரும் நடிகை சனம் ஷெட்டியும் நீண்ட வருடங்களாக காதலித்து வந்தனர். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தர்ஷன் தன்னிடம் சரியாக பேசுவதில்லை என்றும், அவர் தன்னை ஏமாற்றிவிட்டார் என்று சனம் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தார்.

இதற்கு தர்ஷன் மறுப்பு தெரிவித்தார். மேலும் சனம் ஷெட்டி அவரது முன்னாள் காதலருடன் இரவு நெருக்கமாக இருந்தார் அதனால் தான் நான் அவரை விட்டு விலகினேன் என்று தன் தரப்பு நியாயத்தை சொன்னார்.

இந்நிலையில் சனம் ஷெட்டியின் முன்னாள் காதலர் அஜய் தற்போது பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ளார். அதில் எனக்கு சனம் ஷெட்டியை 6 வருடமாக தெரியும். நாங்கள் இருவரும் 3 வருடங்களாக காதலித்தோம். ஆனால் கடந்த இரண்டு வருடமாக நாங்கள் பேசிக்கொள்வது இல்லை. சத்யாவின் திருமணத்தின் போது தான் சனம் ஷெட்டியை மீண்டும் பார்தேன். அங்கு இருவரும் சாதரணமாக பேசிக்கொண்டோம்.

தர்ஷன் நாங்கள் இருவரும் தனியாக ஓட்டலில் இருந்தது போல சொன்னார். நாங்கள் இருவரும் ஓட்டலுக்கு தனியாக செல்லவில்லை எங்களுடன் 20 பேர் அதே ஹோட்டலில் தங்கியிருந்தார். அந்த ஓட்டலை கூட சத்யா தான் புக் செய்து தந்தார். இவ்வாறு சனம் ஷெட்டியின் முன்னாள் காதலர் அஜய் தெரிவித்துள்ளார்.