நரக வாழ்க்கை வாழ்ந்து வருகிறேன்…வீடியோ வெளியிட்ட பிரபல நடிகை

ப்ரண்ட்ஸ், பாஸ் என்கிற பாஸ்கரன், தில்லாலங்கடி போன்ற படங்களில் நடித்தவர் விஜயலட்சுமி. இவர் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் அவர் சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில் தான் பெங்களூரில் நரகத்தை விடவும் மோசமாக கஷ்டப்பட்டு வருவதாகவும், ரஜினி சாரை பார்த்து என் கஷ்டங்களை சொல்லவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மாநாடு படத்தில் இருந்து சிம்புவை நீக்கிய தயாரிப்பாளர் – ரசிகர்கள் ஷாக்!

இதுகுறித்து அவர் மேலும் பேசிகையில்  எல்லோரும் என்னை கைவிட்டு விட்டார்கள். என்னுடைய கடைசி நம்பிக்கை அவர் தான். நான் இந்த நிலையில் இருப்பதை பார்த்து எல்லோரும் ரொம்ப சந்தோஷத்தில் இருக்கிறார்கள். ஆனால் ரஜினி சாருக்கு தெரியும் நான் ஏன் அவரை பார்க்க நினைக்கிறேன் என்று, இவ்வாறு விஜயலட்சுமி அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

விஜயலக்ஷ்மி #தலைவரை சந்திக்க வேண்டி வெளியிட்ட வீடியோ.. .

Rajini Rajesh द्वारा इस दिन पोस्ट की गई बुधवार, 7 अगस्त 2019