அசினின் மகளை பார்த்திருக்கீங்களா! குட்டி தேவதையின் புகைப்படம் இதோ

“உள்ளம் கேட்குமே” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அசின். அதன் பிறகு பல ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக மாறினார்.

பின்னர் பாலிவுட் பக்கம் சென்ற அசின் அங்கும் கொடிகட்டிப் பறந்தார். தொடர்ந்து நடித்து வந்த அசின் கடந்த 2016 ஆம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் ஷர்மாவை  காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்த ஜோடிக்கு அரின் என்ற அழகான பெண் குழந்தை உள்ளது.

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட அனுஷ்கா ஷர்மா!

இந்நிலையில் அசின் தனது மகள் அரினின் பழைய புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ஓணம் வாழ்த்து கூறியுள்ளார். குட்டி தேவதையாய் மிளிரும் அரினின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.