இவ்வளவு நாள் வேற்று கிரகத்தில் இருந்தீர்களா? கொந்தளித்த லாஸ்லியா

பிக்பாஸ் மூன்றாவது சீசன் தொடங்கி 53 நாட்கள் கடந்துவிட்டது. இதுவரை 7 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். இதில் வனிதா மீண்டும் வீட்டுக்குள் வந்துள்ளார். இது ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

வனிதா ரீ-என்ட்ரி கொடுத்த பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி சூடுபிடித்துள்ளது. அதற்கு காரணம் வனிதா போட்டியாளர்களுக்கு இடையே பிரச்சனையை தூண்டிவிட்டு அதில் குளிர் காய்ந்து வருகிறார். இது பிக்பாஸின் புதிய உத்தியாகவே பார்க்கப்படுகிறது.

பிக்பாஸ் வீட்டில் பிரச்சனையை தூண்டிவிடும் வனிதாவுக்கு லாஸ்லியா வைத்த பட்டப்பெயர் என்ன தெரியுமா?

இந்நிலையில் இன்றை நிகழ்ச்சிக்கான ப்ரோமோ காலை வெளியானது. அதில் நேற்று மதுமிதா பிக்பாஸ் வீட்டில் பெண்களை, ஆண்கள் பயன்படுத்தி கொள்கிறார்கள் என கூற அது பெரிய பிரச்சனை ஆனது. அந்த பிரச்சனை குறித்த விவாதம் இன்று நடக்கிறது. அப்போது மதுமிதாவிடம் பேசிய லாஸ்லியா, வனிதா வீட்டிற்குள் வந்த பிறகு தான் நீங்களெல்லாம் பேச ஆரம்பிச்சீங்க, அதுக்கு முன்னாடி வேற்று கிரகத்தில் இருந்தீங்களா? இப்போ மட்டும் பேசுகிறீர்கள் என்று கோபமாக பேசியுள்ளார்.