தர்ஷன் விவகாரத்தில் சனம் ஷெட்டிக்கு நடந்த ஒரே ஒரு நல்லது இதுதான்… பிக்பாஸ் போட்டியாளரின் கருத்து

தர்ஷன் – சனம் ஷெட்டி காதல் விவகாரம் இன்னும் முடிந்தபாடில்லை. இருவரும் தங்கள் தரப்பு நியாயத்தை கூறி வருகின்றனர். அதனால் தற்போது சமூக வலைத்தளங்களில் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது.

தர்ஷன் ஒரு கருத்து கூற, உடனே சனம் ஷெட்டி அதற்கு பதில் அளித்து வருகிறார். இந்நிலையில் இந்த விவகாரத்தில் சனம் ஷெட்டிக்கு ஒரே ஒரு நல்லது நடந்துள்ளது என நடிகையும், பிக்பாஸ் போட்டியாளருமான காஜல் பசுபதி கருத்து கூறியுள்ளார்.

இந்த பிரச்சினை குறித்து ரசிகர் ஒருவர் டுவிட்டரில் கேட்ட கேள்விக்கு “இந்த விவகாரத்தில் சனம் ஷெட்டிக்கு நடத்த ஒரே நல்லது திருமணத்திற்கு முன்பே தர்ஷனின் உண்மையான முகம் தெரிந்துவிட்டது. ஒருவேளை திருமணத்திற்கு பிறகு இது தெரிந்திருந்தால் இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இன்னும் மோசமாக இருந்திருக்கும். கடவுள் அவர்களுக்கு உதவட்டும்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.