பிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தாவுடன் இணைந்த ஜூலி! என்ன படம் தெரியுமா?

பிக்பாஸ் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்துக்கொண்டு ஃபைனல் வரை சென்றவர் ஐஸ்வர்யா தத்தா. பிக்பாஸ் வீட்டில் இவர் நடந்துக்கொண்ட விதம் பலரையும் முகம் சுழிக்க வைத்தது.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஐஸ்வர்யா மகத்துடன் இணைந்து கெட்டவனு பேரெடுத்த நல்லவன்டா என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் கன்னித் தீவு, “பொல்லாத உலகில் பயங்கர கேம்” ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.

இதில் பொல்லாத உலகில் பயங்கர கேம் படத்தில் ஐஸ்வர்யா தத்தாவுடன் இணைந்தது பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளர் ஜூலி முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உச்சகட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த அனேகன் பட நாயகி! வைரலாகும் புகைப்படம்

விரைவில் இப்படம் குறித்த மற்ற விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.