அமலாபாலை தொடர்ந்து நிர்வாணமாக நடித்துள்ள பிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தா – எந்த படத்தில் தெரியுமா?

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. இப்படத்திற்கு பிறகு பெரிதாய் பட வாய்ப்புகள் இல்லாததால் பிக்பாஸ் நிகழ்சியில் கலந்துக்கொண்டு பிரபலமானார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா “பொல்லாத உலகின் பப்ஜி” என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த படத்தை விஜய் ஸ்ரீ என்பவர் இயக்குகிறார். அர்ஜுமனன் ஹீரோவாக நடிக்கிறார். தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வரும் இந்தப்படத்தில் ஐஸ்வர்யா தத்தா ஒரு காட்சியில் நிர்வாணமாக நடித்துள்ளார். படத்திற்கு தேவையான காட்சி என்பதால் அவர் துணிந்து நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக கடந்த ஆண்டு வெளியான “ஆடை” படத்தில் நடிகை அமலாபால் முழு நிர்வாணமாக நடித்தது குறிப்பிடத்தக்கது.