பிக்பாஸ் வீட்டிற்குள் புதிதாய் நுழைந்த போட்டியாளர்! ரசிகர்கள் அதிர்ச்சி

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தொடங்கி 49 நாட்கள் கடந்துவிட்டது. நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தை கூட்ட பிக்பாஸ் குழு தங்களால் முடிந்தவற்றை செய்து வருகிறது. இதுவரை ஃபாத்திமா பாபு, வனிதா விஜயகுமார், மோகன் வைத்யா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன் என ஆறு போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். நேற்று சாக்ஷி வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் இன்றைய எபிசோடின் முதல் ப்ரோமோ காலை வெளியானது. அதில் பிக்பாஸ், ஹவுஸ்மெட்ஸ்களுக்கு “பிக்பாஸ் ஹோட்டல்” என்ற பெயரில் புதிய டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளார். மேலும் இந்த ஓட்டலுக்கு சிறப்பு விருந்தினர் ஒருவர் வருவார் என அறிவிக்கப்பட்டது. யார் அந்த முக்கிய விருந்தினர் என்பதை காண வீட்டில் உள்ளவர்கள் ஆர்வமாக காத்திருந்தனர். அப்போது வனிதா வீட்டுக்குள் என்ட்ரி ஆகி போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் மீனா! ரசிகர்கள் மகிழ்ச்சி

இவர் இந்த டாஸ்க் முடிந்ததும் சென்றுவிடுவாரா இல்லை நிகழ்சியில் தொடர்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.