பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போகிறவர் இவர் தானா?

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீசன் தொடங்கி 46 நாட்கள் கடந்துவிட்டது. நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தை கூட்ட பிக்பாஸ் குழு தங்களால் முடிந்தவற்றை செய்துவருகிறது. அதன்படி இந்த வாரம் வைல்ட் கார்டு என்ட்ரி மூலம் நடிகை கஸ்தூரி பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தார். அதற்கு முன்னரே சரவணன் சில காரணங்களால் திடிரென வெளியேற்றப்பட்டார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த வாரம் யார் வெளியேற்றப்படுவார் என்பதை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்த வார நாமினேஷன் பட்டியலில் லாஸ்லியா, அபிராமி, சாக்ஷி ஆகியோர் உள்ளனர். இதில் சாக்ஷி வெளியேற்றபட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அஜித்தின் அடுத்த படத்தில் கமிட் ஆன பிக்பாஸ் நடிகை!

சாக்ஷி கடந்த வாரமே எலிமினேட் ஆவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிக்பாஸ் ரேஷ்மாவை வெளியேற்றியது குறிப்பிடத்தக்கது.