உண்மையான காதல் குறித்து பிக்பாஸ் லாஸ்லியா உருக்கமாக வெளியிட்ட பதிவு!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு லாஸ்லியா ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடிக்கும் ப்ரெண்ட்ஷிப் என்ற படத்தில் நடிக்கிறார். மேலும் ஆரி நடிக்கும் புதிய படத்திலும் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தின் பூஜை நேற்று எளிமையாக நடைப்பெற்றது.

இந்நிலையில் லாஸ்லியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக ஒரு பதிவிட்டுள்ளார். அதில் தன் அப்பாவின் புகைப்படத்தை பகிர்ந்து “பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பாச்சி. கடந்த 23 வருடங்களாக எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் என்னை பார்த்துக்கொண்டீர்கள்.

இந்த உலகத்தில் எந்த பொண்ணும் இவ்ளோ தூரம் ஒரு டிவி சேனலுக்கு கூப்பிட்டு இந்த உலகமே கேவலமா கதைக்குற சிச்சுவேஷன்ல அவங்க அப்பாவ வச்சுருப்பாங்கலான்னு தெரியல. ஆனா நீங்க இன்னும் என்னை நேசிக்கிறீங்க. பொண்ணுங்களுக்கு தூய்மையான காதல் அவர்களுடைய அப்பாவிடம் தான் கிடைக்கும்” இவ்வாறு அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.