கவின் செய்த காரியத்தால் கடுப்பான சேரன்!

பிக்பாஸ் மூன்றாவது சீசன் தொடங்கி 79 நாட்கள் எட்டிவிட்டது. இதுவரை 10 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். இதில் வனிதா வைல்ட் கார்டு என்ட்ரி மூலம் மீண்டும் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

இது ஒருபுறம் இருக்க பிக்பாஸ் தொடக்கத்தில் இருந்தே கவின் – லாஸ்லியா காதல் பெரிதாய் பேசப்பட்டு வருகிறது. லாஸ்லியா இதுவரை கவினிடம் வெளிப்படையாக காதலை சொல்லவில்லை. கவின் கேட்கும் போதெல்லாம் வெளியே போய் பேசுவோம் என கூறிவருகிறார்.

இந்நிலையில் கவின் மீண்டும் லாஸ்லியாவிடம் காதலை கூறும்படி வற்புறுத்தினார். அதற்கு லாஸ்லியா வழக்கம்போல் வெட்கப்பட்டுக் கொண்டே “எல்லாம் வெளியே போய் பேசுவோம்” என்று பதிலளித்தார்.

பிக்பாஸ் வீட்டில் ஒரு பெண் இப்படியா நடந்துக் கொள்வது – உண்மையை போட்டுடைத்த மதுமிதா

இதையெல்லாம் சீக்ரெட் ரூமில் இருந்து பார்த்துக்கொண்டிருக்கும் சேரன் கமல் சாரிடம் இனிமேல் இந்த விஷயம் பற்றி பிக்பாஸ் வீட்டுக்குள் பேசமாட்டோம் எல்லாம் வெளியே போய் பேசிகொள்கிறோம் என்று சொன்ன கவின். இப்போது லாஸ்லியாவை ஃபோர்ஸ் செய்கிறார் என்று மக்களை பார்த்து கூறியுள்ளார்.