தற்கொலை முயற்சி செய்த மதுமிதாவின் பரிதாப நிலை – முன்னாள் போட்டியாளர் ஓபன் டாக்

பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் பரபரப்பாகி கொண்டிருக்கிறது. நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தை கூட்ட பிக்பாஸ் குழு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.

இதனிடையே கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற மதுமிதா தற்கொலை முயற்சி மேற்கொண்டார். இது பரபரப்பாக பேசப்பட்டது. மதுமிதா செய்த இந்த காரியத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மதுமிதா பிக்பாஸ் வீட்டை விட்டு அதிரடியாக வெளியேற்றப்பட்டார்.

கமலின் “இந்தியன் 2” படத்தில் இணைந்த பிரபல காமெடி நடிகர்!

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய மதுமிதாவை முன்னாள் போட்டியாளர் டேனியல் சந்தித்துள்ளார். இது குறித்து பிரபல யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் மதுமிதா நன்றாக உள்ளார். ஆனால் அவர் கையில் உள்ள காயத்தால் கஷ்டப்படுகிறார். வலி அதிகமாக உள்ளதாக கூறினார். அவரால் சரியாக தூங்க கூட முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.