அஜித்தின் அடுத்த படத்தில் கமிட் ஆன பிக்பாஸ் நடிகை!

அஜித் நடிப்பில் ஹச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் நேற்று ரிலீஸான படம் “நேர்கொண்ட பார்வை”. இப்படத்தில் அஜித்துடன் இணைந்து வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆண்ட்ரியா தாரியங், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று வெளியான இப்படத்தை தல ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இப்படத்தை தொடர்ந்து அஜித், ஹச்.வினோத் மற்றும் போனி கபூர் கூட்டணியில் மீண்டும் நடிக்கவுள்ளார்.

இந்த வயதில் இதெல்லாம் தேவையா? மாமனாரிடம் கோபப்பட்ட சமந்தா

“தல 60” என அழைக்கப்படும் இப்படத்தில் பிக்பாஸ் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு வெளியேறிய ரேஷ்மா நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.