இதற்காகவா பிக்பாஸ் சென்றேன்…வருத்தப்பட்டு சரவணன் அளித்த முதல் பேட்டி!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நாளாக நாளாக பரபரப்பாகி கொண்டிருக்கிறது. இதுவரை ஃபாத்திமா பாபு, வனிதா விஜயகுமார், மோகன் வைத்யா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன் என 6 பேர் வெளியேறியுள்ளனர்.

இதில் சரவணன் நாளினேஷன் மூலம் வெளியேறவில்லை பிக்பாஸே நேரடியாக வெளியேற்றினார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போகிறவர் இவர் தானா?

‌பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சரவணன் யாருக்கும் பேட்டி அளிக்காமல் இருந்தார். இந்நிலையில் அவர் முதல் முதலாக பேட்டி கொடுத்துள்ளார். அதில், நான் கூறிய கருத்திற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட பிறகும் பிக்பாஸ் குழுவினர் இப்படி செய்தது வேதனை அளிக்கிறது. கல்லூரி காலத்தில் தவறாக நடந்தது உண்மை தான், ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அதற்காகவா சென்றேன். அங்கு நான் பெண்களிடம் கண்ணியமாக தான் நடந்து கொண்டேன் என்று சரவணன் வருத்தப்பட்டு பேசியுள்ளார்.