இப்படி நடக்கும் என தெரிந்திருந்தால் நான் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கவே மாட்டேன்…மனம் உருகி பேசிய சரவணன்

பிக்பாஸ் மூன்றாவது சீசன் கடந்த சில நாட்களாக பரபரப்பாக சென்றுகொண்டிருக்கிறது. தான் கல்லூரியில் படிக்கும் போது பெண்களை இடிப்பதற்காகவே பேருந்தில் பயணித்தேன் என சரவணன் கமலிடம் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சரவணன் பிக்பாஸ் வீட்டிலிருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டார்.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சரவணனிடம் நடிகர் பரணி தொலைபேசியில் பேசியுள்ளார். இந்த சம்பவத்தின் மூலம் தனக்கு கெட்ட பெயர் வந்துவிட்டதாக கூறி சரவணன் அழுதுள்ளார்.

இதில் வரும் பணத்தை வைத்து புதிய வாழ்க்கை தொடங்கலாம் என இருந்தேன். இப்படி நடக்கும் என தெரிந்திருந்தால் நான் பிக்பாஸ் சென்றிருக்கவே மாட்டேன் என்று சரவணன் பரணியிடம் தெரிவித்துள்ளார்.