வனிதா செய்வது எல்லாம் கேவலமாக உள்ளது! வெளுத்து வாங்கிய முன்னாள் போட்டியாளர்

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக பரபரப்பாகி இருக்கிறது. பிக்பாஸிற்கு செல்ல மாட்டேன் என்று சொன்ன கஸ்தூரி வைல்ட் கார்டு என்ட்ரி மூலம் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தார். மேலும் எலிமினேட் ஆன வனிதா மீண்டும் வீட்டுக்குள் நுழைந்தார். இது ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இணைய வாசிகள் இதை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

வனிதா மீண்டும் வீட்டுக்குள் வந்ததில் இருந்து பிக்பாஸ் வீடு போர்க்களமாக மாறியுள்ளது. ஆண்கள், பெண்கள் என இரு அணிகளாக பிரிந்து சண்டையிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பிக்பாஸ் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்துக் கொண்ட ஷாரிக் சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் போட்டியாளர்களின் தனிப்பட்ட விஷயங்களை பற்றி பேசக்கூடாது என்பது ஒப்பந்தம். ஆனால் வனிதா வெளியில் முகென் பற்றி பலர் அளித்த பேட்டிகளை பார்த்துவிட்டு உள்ளே சென்று முகென் பற்றியும் அவருக்கு ஒரு காதலி இருக்கிறார் என்றெல்லாம் கூறுவதை பார்க்கும்போது கேவலமாக இருக்கிறது.

உலகம் முழுவதிலும் வசூலை வாரிக் குவிக்கும் நேர்கொண்ட பார்வை – இத்தனை கோடிகளா?

வனிதா ஏன் இதை பற்றியெல்லாம் பேசுகிறார் என்பது புரியவில்லை என்று புலம்பியுள்ளார்.