பிக்பாஸ் வீட்டில் மறுபடியும் நுழைந்திருக்கும் வனிதாவிற்கு இவ்வளவு சம்பளமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தொடங்கி 52 நாட்கள் கடந்துவிட்டது. இதுவரை ஃபாத்திமா பாபு, வனிதா விஜயகுமார், மோகன் வைத்யா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்ஷி என 7 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். இதில் வனிதா மீண்டும் வீட்டுக்குள் வரவழைக்கபட்டுள்ளார்.

கடந்த சில வாரங்களாக மந்தமாக இருந்த “பிக்பாஸ்” வனிதா ரீ – என்ட்ரிக்கு பிறகு சூடுபிடித்துள்ளது. அதற்கு காரணம் வனிதா வீட்டில் உள்ளவர்களை குழப்பி அவர்களுக்குள் சண்டையை வரவழைக்க செய்கிறார். இது பிக்பாஸின் புதிய உத்தியாகவே பார்க்கப்படுகிறது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிகினி உடையில் டாப்ஸி! வைரலாகும் புகைப்படம்

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் மறுபடியும் நுழைந்திருக்கும் வனிதாவிற்கு தரப்படும் சம்பளம் குறித்த தகவல் கசிந்துள்ளது. வனிதாவிற்கு ஒரு நாளைக்கு ஒன்றரை லட்சம் சம்பளம் என்று கூறப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.