வனிதா சொன்னால் பிக்பாஸ் வீட்டு கதவு திறக்குமா? கேள்வி எழுப்பிய பிரபல நடிகை

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. இதுவரை ஃபாத்திமா பாபு, வனிதா விஜயகுமார், மோகன் வைத்யா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்ஷி என 7 பேர் வெளியேறியுள்ளனர். இதில் வனிதா விஜயகுமார் மீண்டும் வீட்டுக்குள் வரவழைக்கபட்டுள்ளார். நிகழ்சியின் சுவாரஸ்யத்தை கூட்ட பிக்பாஸ் குழு இத்தகைய முடிவை எடுத்துள்ளது. இது ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் வனிதா வீட்டுக்குள் வந்தவுடன் போட்டியாளர்களுக்கு இடையே பிரச்சனையை உண்டாக்கி ஆண்கள், பெண்கள் என இரு அணியாக பிரித்துவிட்டார். மேலும் அப்பா, மகள் உறவு கொண்டாட நினைப்பவர்கள் வெளியே போகலாம் நான் பிக்பாஸிடம் சொல்லி கதவை திறந்து வைக்க சொல்கிறேன் என்று சேரனையும், லாஸ்லியாவையும் தாக்கினார். அதுமட்டுமின்றி வீட்டுக்குள் எதாவது பிரச்சினை வந்தால் பிக்பாஸிடம் சொல்லி குறும்படம் போடச் சொல்கிறேன் என திமிராக சொல்கிறார்.

என்னை குறை சொல்பவர்கள் முதலில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று யோசித்து பாருங்கள்..கோபத்தில் நித்யா மேனன் வெளியிட்ட வீடியோ

இதையெல்லாம் பார்த்த பிரபல நடிகை ஸ்ரீ ப்ரியா எனக்கு ஒரு சந்தேகம். வனிதா சொன்னால் பிக்பாஸ் வீட்டு கதவு திறந்து வைக்கப்படுமா? வனிதா அவர்கள் சொன்னால் குறும்படம் போடப்படுமா? என்று தனது டுவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.