பிகில் டிரைலர் எப்போது வெளியாகிறது – அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ

பிகில் டிரைலர் எப்போது வெளியாகிறது – அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ

தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் பிகில். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்திலிருந்து ஏற்கனவே பாடல்கள் வெளியாகி வரவேற்பு பெற்ற நிலையில் டிரைலருக்காக ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.

புள்ளிங்கோ ஸ்டைலுக்கு மாறிய நடிகை ரம்யா பாண்டியன்… வைரலாகும் புகைப்படம்

இந்நிலையில் பிகில் டிரைலர் எப்போது வெளியாகிறது என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. தளபதி ரசிகர்கள் இத்தனை நாளாக காத்திருந்த பிகில் டிரைலர் அக்டோபர் 12 மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது.