முகெனுக்கும் அபிராமிக்கும் இடையே வெடித்த பெரிய சண்டை – போர்க்களமான பிக்பாஸ் வீடு

பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் பரபரப்பாகி கொண்டிருக்கிறது. நேற்று வனிதா தீடிரென வீட்டுக்குள் வரவழைக்கப்பட்டார். இது ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இன்று காலை வெளியான முதல் ப்ரோமோவில் வனிதா, அபிராமியிடம் “நீதான் முகென் பின்னால் போற, கடைசியில முகென் ஹீரோ ஆகிட்டான். நீ ஜீரோ ஆயிட்ட, நீ என்னடா என்ன லவ் பண்றது. எனக்கு நீ தேவையே இல்லைன்னு தூக்கிப்போட்டு போ, இவ்வாறாக கூறினார்.

அதைதொடர்ந்து வெளியான இரண்டாவது ப்ரோமோவில் முகெனுக்கும் அபிராமிக்கும் இடையே பெரிய சண்டை வெடிக்கிறது. இறுதியில் முகென் சேரை தூக்கி அடிக்க செல்ல, சுதாரித்து கொண்ட மற்ற போட்டியாளர்கள் முகெனை தடுத்தனர். இதனால் பிக்பாஸ் வீடு போர்க்களமாக மாறியுள்ளது.