வசூலை வாரிக் குவிக்கும் கோமாளி! 6 நாட்களில் இத்தனை கோடிகளா?

ஜெயம் ரவி நடிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஐசரி கே.கணேஷ் தயாரிப்பில் கடந்த வாரம் வெளியான படம் “கோமாளி”. இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். மேலும் சம்யுக்தா ஹெக்டே, கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு, ஷாரா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஹிப் ஹாப் தமிழா இசையமைத்திருந்தார்.

கடந்த வாரம் வெளியான கோமாளி படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இப்படம் 6 நாட்களில் சுமார் ரூ 25 கோடி வசூல் செய்துள்ளதாக டிரேடிங் வட்டாரங்களில் கூறப்படுகிறது. இதில் தமிழகத்தில் மட்டுமே ரூ 20 கோடி வசூல் செய்துள்ளது.

தெய்வமகள் வாணி போஜனுக்கு அடித்த லக்! குஷியில் ரசிகர்கள்

ஜெயம் ரவியின் இத்தனை ஆண்டு கால திரைப்பயணத்தில் கோமாளி மிகப்பெரிய ஓபனிங் கொடுத்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.