வடிவேலு மீது ஷங்கர் மீண்டும் புகார்: இந்த படமும் போச்சா? ரசிகர்கள் வேதனை

வடிவேலு நடிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் 2006 ஆம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் இம்சை அரசன் 23-ம் புலிகேசி.

இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வேலையை கடந்த வருடம் சிம்புதேவன் தொடங்கினார். படப்பிடிப்பு 10 நாட்கள் நடைப்பெற்ற நிலையில் சிம்புதேவன், வடிவேலு இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து வடிவேலு படத்திலிருந்து வெளியேறினார்.

வடிவேலு திரும்பி வருவார் என படக்குழுவினர் காத்திருந்தனர். ஆனால் வடிவேலு வந்தபாடில்லை. இதனால் ரூ 6 கோடி செலவில் அமைக்கப்பட்ட செட் பிரிக்கப்பட்டது. மேலும் வடிவேலு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் ஷங்கர் புகார் அளித்தார். வடிவேலு 24-ம் புலிகேசியில் நடிக்க வேண்டும். இல்லையென்றால் ரூ 10 கோடி நஷ்ட ஈடு தரவேண்டும் என்று ஷங்கர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் வடிவேலு படப்பிடிப்புக்கு வருவதாய் இல்லை.

காதலில் அதுதான் ரொம்ப முக்கியம்… கமலின் மகள் கொடுத்த சூப்பர் அட்வைஸ்!

இந்நிலையில் தயாரிப்பாளர் ஷங்கர் மற்றும் சுபாஷ்கரன் ஆகியோர் மீண்டும் தயாரிப்பாளர் சங்கத்தை அணுகியுள்ளனர். வடிவேலு உடனடியாக எங்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து வடிவேலு நஷ்ட ஈடு வழங்கும் வரை அவரை வேறு எந்த படத்திலும் நடிக்க வைக்க கூடாது என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் வடிவேலு தற்போது சுராஜ் படத்தில் நடிக்க முடியாது நிலை ஏற்பட்டுள்ளது.

நீண்ட வருடங்களாக வடிவேலு காமெடிக்காக காத்திருக்கும் அவரது தீவிர விசிறிகள் இந்த படமும் போச்சா? என கலக்கத்தில் உள்ளனர்.