மேடையில் செம குத்து டான்ஸ் போட்ட கௌதம் மேனன், வியப்பில் ரசிகர்கள், வீடியோ இதோ

கௌதம் மேனன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான என்னை நோக்கி பாயும் தோட்டா கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இப்படத்தை தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில் “ஜோஷ்வா இமை போல் காக்க” திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில் கௌதம் சிங்கப்பூரில் பிரம்மாண்ட இசை கச்சேரி ஒன்றை நடத்தியுள்ளார். அதில் தான் திரையுலகில் கடந்து வந்த பாதை, தான் பணியாற்றிய இசையமைப்பாளர்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

மேலும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவான “அஞ்சல” பாடலுக்கு மேடையில் குத்தாட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.