இதற்கும் பிகில் படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, ஓபனாக கூறிய பிரபல இயக்குனர்

தளபதி விஜய் மற்றும் அட்லீ கூட்டணியில் மூன்றாவது முறையாக தயாராகி வரும் படம் பிகில். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் ஜாக்கி ஷெரிப், கதிர், இந்துஜா, விவேக், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில் விஜய் ஃபுட்பால் கோச்சாக நடித்து வருகிறார். அதுவும் பெண்கள் அணியின் கோச்சாக நடித்துள்ளார். இதேபோல் நாளை ரிலீஸ் ஆகவுள்ள கென்னடி கிளப் படத்தில் பெண்கள் அணியின் கபடி டீம் கோச்சாக சசிக்குமார் நடித்துள்ளார்.

இதனால் இந்த இரண்டு படங்களின் கதையும் ஒரே மாதிரி இருக்கும் என பலரால் கூறப்பட்டு வந்தது.

வசூலை வாரிக் குவிக்கும் கோமாளி! 6 நாட்களில் இத்தனை கோடிகளா?

இந்நிலையில் கென்னடி கிளப் படத்தின் இயக்குனர் சுசீந்திரன் இதுகுறித்து பேசுகையில் பிகிலுக்கும், கென்னடி கிளப் படத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. இரண்டு படங்களின் எமோஷன் விளையாட்டு, “அது மட்டுமே ஒற்றுமை”. என கூறியுள்ளார்.