முதன் முறையாக நாமினேஷனுக்கு வந்த லாஸ்லியா!

பிக்பாஸ் மூன்றாவது சீசன் ஆரம்பத்தில் இருந்தே அதிக ரசிகர்கள் தன் வசம் ஈர்த்தவர் லாஸ்லியா. இதற்கு காரணம் அவர் யாரை பற்றியும் குறை சொல்லாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருந்தார். இதனால் ஓவியா போல லாஸ்லியாவிற்கு ரசிகர்கள் ஆதரவு தந்து வந்தனர்.

ஆனால் கடந்த சில வாரங்களாக லாஸ்லியாவின் உண்மை முகம் தெரிய ஆரம்பித்துள்ளது. கவினுக்கும் சாக்ஷிக்கும் இடையே காதல் என்று தெரிந்தும் கூட கவினிடம் வழிந்து பேசுவது. கவினுக்கு யாரையெல்லாம் பிடிக்கவில்லையோ அவர்களை நாமினேட் செய்வது.

மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கவுள்ள கீர்த்தி சுரேஷ்!

சேரனை தனது அப்பா என கூறிவிட்டு அவருக்கு ஒரு பிரச்சினை வரும்போது குரல் கொடுக்காமல் அமைதியாக இருப்பது, இது போன்ற செயல்களால் லாஸ்லியாவிற்கு சமீப காலமாக ரசிகர்கள் குறைந்து வருகின்றனர்.மேலும் இன்றைய ப்ரோமோவில் லாஸ்லியாவை ஷெரின், சாக்ஷி, சரவணன் ஆகியோர் நாமினேட் செய்துள்ளனர். பிக்பாஸ் தொடங்கி இத்தனை வாரங்களில் லாஸ்லியா முதன் முறையாக நாமினேஷனுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.