என் நடிப்பை இழிவுபடுத்திவிட்டனர்…நடிகர் கவுண்டமணி புகார்!

பிரபு நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் “சின்னதம்பி”. இப்படத்தில் நடிகர் கவுண்டமணி மாலை கண் நோய் உள்ளவராக நடித்திருப்பார். அந்த காமெடி காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.

இந்நிலையில் கவுண்டமணியின் கதாபாத்திரத்தை அப்படியே காப்பி அடித்து சிக்ஸர் என்ற பெயரில் படமாக்கியுள்ளனர். இப்படத்தில் வைபவ், பலக் லால்வானி, சதிஷ், ராதா ரவி, இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இன்று ரிலீஸாகும் இப்படத்தின் மீது கவுண்டமணி புகார் அளித்துள்ளார்.

சூப்பர் ஸ்டாருடன் ஒரே ஒரு சீன் நடித்துவிட்டு உயிரை விடவும் தயார் – உருக்கமாக பேசிய நடிகர்

அதில் சிக்ஸர் படத்தில் கவுண்டமணி அவர்களது புகைப்படத்தை பயன்படுத்தி இருந்த விதத்தையும், இழிவான வசனங்களையும் பார்த்து அதிர்ச்சியுற்றார். அந்த வசனம் மிகவும் அவதூறானது. அது அவரின் நற்பெயருக்கும், நன்னடத்தைக்கும் களங்கம் விளைவிப்பதாக உள்ளது. என்று அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.