தர்ஷனுக்கு ஓட்டு குறைய இதுதான் காரணம்! முன்னாள் போட்டியாளர் சொன்ன தகவல்

பிக்பாஸ் மூன்றாவது சீசன் இன்னும் சில நாட்களில் நிறைவு பெற இருக்கிறது. முகென், தர்ஷன், லாஸ்லியா, சாண்டி, ஷெரின் ஆகியோர் வீட்டிற்குள் இருந்தனர். இதில் நேற்று வாக்குகளின் அடிப்படையில் தர்ஷன் வெளியேற்றப்பட்டார். தர்ஷன் தான் இந்த சீசன் வின்னர் என எதிர்பார்த்த நிலையில் அவர் எலிமினேட் செய்யப்பட்டது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பிக்பாஸ் முதல் சீசனில் 15 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்ட காயத்ரி ரகுராம் தர்ஷன் எலிமினேஷன் பற்றி பேசியுள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள காயத்ரி வாக்குகளில் பின்தங்கிய போட்டியாளர்களுக்கு ஓட்டு போட்டவர்கள் ஸ்ட்ராங் போட்டியாளரை மறந்துவிட்டனர். அவருக்கு மற்றவர்கள் ஆதரவு கொடுப்பார்கள் என நினைத்து இப்படி செய்திருக்கலாம்.

பிக்பாஸ் வீட்டில் புதிதாய் நுழைந்த பிரபலங்கள் – கொண்டாட்டத்தில் போட்டியாளர்கள்

ஆனது ஆகட்டும், இனிமேலாவது சரியான வெற்றியாளரை தேர்ந்தெடுப்போம். என்னுடைய தேர்வு முகென் அல்லது சாண்டி என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here