நடிகர் கமல்ஹாசனின் இரண்டாவது மகளும் நடிகையுமான அக்ஷரா ஹாசன் தல அஜித்தின் “விவேகம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பிறகு நடிகர் விக்ரமுடன் இணைந்து “கடாரம் கொண்டான்” படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் அக்ஷரா நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

கடாரம் கொண்டான் படத்தை தொடர்ந்து அக்ஷரா “ஃபிங்கர்டிப்” என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார். இந்த வெப் சீரிஸை இயக்குனர் விஷ்ணுவர்தன் தயாரித்துள்ளார். சமூக வலைத்தளங்களின் மூலம் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இது விரைவில் ஒளிப்பரப்பாக உள்ளது.

இந்நிலையில் ஃபிங்கர்டிப் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அக்ஷரா ஹாசனிடம் காதலில் எது முக்கியம் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அக்ஷரா காதலில் “நேர்மை” தான் முக்கியம் என்று பதிலளித்தார்.

இதற்கும் பிகில் படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, ஓபனாக கூறிய பிரபல இயக்குனர்

மேலும் சமூக வலைத்தளங்கள் மற்றும் மொபைலிடம் இருந்து சற்று விலகி, சக மனிதர்களிடம் பேசுங்கள் என்று அட்வைஸ் செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here