இந்தியன் 2 படத்தின் மாஸான புதிய போஸ்டர் இதோ!

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் படம்  “இந்தியன் 2”. இது 1996 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இதில் கமலுடன் இணைந்து காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், ஐஸ்வர்யா ராஜேஷ், ப்ரியா பவானி சங்கர், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.

சில காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த “இந்தியன் 2” படத்தின் படப்பிடிப்பு தற்போது துவங்கியுள்ளது. இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் சுதந்திர தினத்திற்கு வாழ்த்து கூறும் வகையில் ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

வயதான கமல் ராணுவ உடையணிந்து கம்பீரமாக நிற்பது போல், வடிவமைக்கப்பட்டுள்ள அந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.