“இந்தியன் 2” படத்தின் கதை இதுவா?

ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் “இந்தியன்”. இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.

இப்படத்தில் கமலுடன் இணைந்து சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், விவேக் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளனர். அனிருத் இசையமைக்கவுள்ளார்.

தளபதி 64 – வில்லன் இவரா? பெரிய எதிர்பார்ப்பில் விஜய் ரசிகர்கள்

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் கதை என்று, ஒரு கதை சமூக வலைதளங்களில் உலாவி வருகிறது. “ஊழல்களை யூடியூப் சேனல் மூலம் வெளியிட்டு வரும் இளைஞரின் உயிருக்கு அரசியல்வாதிகள் குறிவைக்கின்றனர். இந்த தகவலை அறிந்த இந்தியன் தாத்தா இளைஞருக்கு உதவுகிறார். ஊழல் அரசியல்வாதிகளை தன் வர்மக்கலையால் கொலை செய்கிறார். இவர்களுக்கு நல்ல அரசியல்வாதி கமல் உதவி செய்கிறார்” என்பது தான் அந்த கதை. ஆனால் இதுதான் படத்தின் நிஜக்கதையா என்பது தெரியவில்லை.