சாஹோ இந்த படத்தின் காப்பியா? கொந்தளித்த ப்ரென்ச் இயக்குனர்

பிரபாஸ் நடிப்பில் சுஜித் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான படம் “சாஹோ”. இப்படத்தில் பிரபாஸ்க்கு ஜோடியாக ஷ்ரத்தா கபூர் நடித்திருந்தார். மேலும் ஜாக்கி ஷெரிப், அருண் விஜய், முரளி சர்மா, வெண்ணிலா கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

350 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள “சாஹோ” என் படத்தின் அப்பட்டமான காப்பி என ப்ரென்ச் இயக்குனர் ஜெரோம் கூறியுள்ளார்.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜெரோம் “லார்கோ வின்ச் படத்தின் இது இரண்டாவது ப்ரீமேக் முதல் படத்தை போலவே இதுவும் மோசமாக உள்ளது. தெலுங்கு இயக்குனர்களே எனது கதையை திருடினால் குறைந்தபட்சம் அதை ஒழுங்காக திருடுங்கள்” என பதிவிட்டுள்ளார்.

அனுஷ்காவின் சமீபத்திய புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்!

இதற்கு முன் இதே கதையை வைத்து பவன் கல்யாண் நடிப்பில் “Agnathavasi” படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.