இப்படியே அவ சொல்றத கேட்டுட்டு அமைதியா இருங்க பிக்பாஸ் – கொந்தளித்த முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 72 நாட்கள் கடந்து விட்டது. நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தை கூட்ட பிக்பாஸ் குழு பல்வேறு உத்திகளை கையாண்டு வருகிறது. அதன்படி எலிமினேட் ஆன வனிதா மீண்டும் வீட்டிற்குள் வரவழைக்கப்பட்டார். இது மற்ற போட்டியாளர்களுக்கும், பிக்பாஸ் ரசிகர்களுக்கும் கோபத்தை ஏற்படுத்தியது.

இது ஒருபுறம் இருக்க நேற்று வெளியான முதல் புரோமோவில்  வனிதா கவினிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். மேலும் மைக்கை தூக்கி எறிந்து விட்டு இனிமேலும் என்னால் பொறுக்க முடியாது. எனக்கு நியாயம் வேண்டும் என பிக்பாஸிடம் முறையிடுகிறார்.

சாஹோ இந்த படத்தின் காப்பியா? கொந்தளித்த ப்ரென்ச் இயக்குனர்

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள முன்னாள் போட்டியாளர் காஜல் பசுபதி “கேப்டனா, நான் சொல்றேன் நீங்க யாரும் எதுவும் பண்ணக்கூடாது. கேப்டனா, நான் பிக்பாஸை கேள்வி கேட்பேன். இப்படியே அமைதியா அவ சொல்றத கேட்டு கைகட்டியே இருங்க பிக்பாஸ்” என கோபமாக பதிவிட்டுள்ளார்.