ஹிந்தியில் ரீமேக் ஆகிறது கைதி – ஹீரோ யார் தெரியுமா?

கார்த்தி, நரேன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சென்ற ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் கைதி. இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்தது. சாம்.சி.எஸ் இசையமைத்திருந்தார். தற்போது இந்த படம் ஹிந்தியில் ரீமேக் ஆகிறது.

இப்படத்தை ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. படத்தில் கார்த்தி கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கன் நடிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் மற்ற நடிகர், நடிகைகள், இயக்குனர் குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.