பிக்பாஸ் வைல் கார்டு என்ட்ரி குறித்து கஸ்தூரி போட்ட ட்வீட்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் ஆரம்பமாகி 42 நாட்கள் கடந்துவிட்டது. வழக்கமான டாஸ்க்குகள், காதல், சண்டை, எலிமினேஷன் என சென்று கொண்டிருக்கையில் கடந்த சில நாட்களாக வைல் கார்டு என்ட்ரி குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ராஜா ராணி புகழ் ஆல்யா மானஸா அல்லது கஸ்தூரி ஆகியோரில் ஒருவர் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர்கள் மறுத்துவிட்டனர்.இந்நிலையில் பிக்பாஸ் வைல்டு கார்டு என்ட்ரி குறித்து ரசிகர் ஒருவரின் கேள்விக்கு கஸ்தூரி வித்யாசமாக பதிலளித்துள்ளார். இது குறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் “நடக்கும் என்பார் நடக்காது, நடக்காதென்பார் நடந்துவிடும்” என கூறியுள்ளார்.

மேலும் நாளை நமதே என ஹேஸ்டேக் போட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர் ஒருவர் ஒரு வேலை கஸ்தூரி பிக்பாஸ் வீட்டுக்குள்ள போக போறததான் மறைமுகமா சொல்றாங்களோ என்னவோ? என கமெண்ட் செய்துள்ளார்.