நடிக்க வந்த இடத்தில் நடிகை செய்த காரியம்… பாராட்டும் ரசிகர்கள் – வீடியோ இதோ

பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கத்ரீனா கைப். இவர் சல்மான் கானுடன் இணைந்து நடித்த பாரத் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.

தற்போது கத்ரீனா, அக்ஷய் குமாருடன் இணைந்து சூர்ய வம்ஷி என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங்கிற்கு இடையில் கத்ரீனா செட்டை கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்துள்ளார்.

அந்த வீடியோவை நடிகர் அக்ஷய் குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் சூர்ய வம்ஷி செட்டில் புது ஸ்வச் பாரத் அம்பாசிடர் என்று அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதை பார்த்த கத்ரீனா ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.