லொஸ்லியா கவினை காதலிக்கிறாரா? இல்லையா? அபிராமியின் பதில்

பிக்பாஸ் மூன்றாவது சீசன் தொடங்கி விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. வழக்கமாக எல்லா சீசனிலும் ஒரு காதல் கதை இருக்கும். ஆனால் இந்த சீசனை பொறுத்தவரையில் எக்கச்சக்க காதல் கதை இருக்கிறது என்று கூறலாம்.

இதில் கவின் – லொஸ்லியா காதல் கதை சீசன் தொடங்கியதில் இருந்தே உள்ளது. கவின், லொஸ்லியாவை ஒருதலையாக காதலித்து வருகிறார். ஆனால் லொஸ்லியாவோ “கவின் எனக்கு நல்ல நண்பர்” என்று கூறிவருகிறார்.

பெரும் ஆபத்தில் சிக்கிக்கொண்ட பிரபல நடிகை! தனுஷ் பட நாயகி என்ன ஆனார்

இந்நிலையில் பிக்பாஸில் இருந்து கடந்த வாரம் வெளியேறிய அபிராமியிடம் கவின் – லொஸ்லியா காதல் குறித்து கேட்கப்பட்டது. கவினுக்கும், லொஸ்லியாவிற்கும் இடையே நல்ல ஃபிரெண்ட்ஷிப் இருக்கு. லைக் இருக்கலாம், ஆனா இல்லாமலும் இருக்கலாம். அது தெரியல. ஆனா அந்த ஃபிரெண்ட்ஷிப்ல லொஸ்லியா ரொம்ப உறுதியா இருக்கா. இவ்வாறு அபிராமி பதிலளித்துள்ளார்.