வெங்கட் பிரபு இயக்கும் வெப் சீரிஸில் இணைந்த இளம் நடிகை!

வெங்கட் பிரபு இயக்கத்தில் இறுதியாக சென்னை 28 இரண்டாவது பாகம் வெளியானது. அதன் பிறகு அவர் இயக்கிய “பார்ட்டி” திரைப்படம் ஒரு சில காரணங்களால் ரிலீஸ் ஆகாமல் உள்ளது.

இதனிடையே வெங்கட் பிரபு மற்றும் சிம்பு கூட்டணியில் மாநாடு திரைப்படம் அறிவிக்கப்பட்டது. ஆனால் மாநாடு படம் குறித்து எந்தவொரு அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.இந்நிலையில் வெங்கட் பிரபு வெப் சீரிஸ் ஒன்றை இயக்கவுள்ளார். இதில் வைபவ், காஜல் அகர்வால் நடிக்கவுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் தகவல்கள் வெளியானது.

தற்போது வெளியாகிருக்கும் தகவல் என்னவென்றால் இதில் கயல் ஆனந்தி புதிதாக இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வெப் சீரீஸ் ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது.