வாரிசு நடிகருக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்

குறுகிய காலத்தில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாகியவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் இறுதியாக சர்கார் திரைப்படம் வெளியானது. இப்படத்தை தொடர்ந்து தமிழில் பெரிதாய் வாய்ப்பு கிடைக்கவில்லை.

தற்போது பாலிவுட் படமொன்றில் ஒப்பந்தம் ஆகியுள்ள கீர்த்தி அதற்காக தன் உடல் எடையை குறைத்துள்ளார். மேலும் நாகர்ஜுனா நடிக்கும் மன்மதடு 2 படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார்.

தொடர்ந்து பிஸியான நடிகையாக வலம் வரும் கீர்த்தி நீண்ட வருடங்களுக்கு பிறகு மலையாள படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இப்படத்தில் ஹீரோவாக மோகன்லாலின் மகன் பிரணவ் நடிக்கவுள்ளார். வினீத் ஸ்ரீனிவாசன் இயக்கும் இப்படத்தில் மோகன்லால் கெஸ்ட் ரோலில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.